Thursday, February 18, 2010

சில்லி கோபி

சில்லி கோபி




தேவையான பொருட்கள்:
======================

காலி ப்ளவர் - ஒன்று
சிகப்பு மிளகாய் - ஐந்து
கார்ன் ப்ளவர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை(விருப்பபட்டால்)
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு ஸ்பூன்
காலி ப்ளவர் பொரிக்க எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:
==========

* சிகப்பு மிளகாயை சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

* கார்ன் ப்ளவரில் உப்பு,அஜினமோட்டோ,நல்லெண்ணெய்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள்,சிகப்பு மிளகாய் விழுது சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தை விட சிறிதளவு நீர்க்க கலந்து கொள்ளவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் காலிப்ளவரை பெரிய பெரிய பூக்களாக நறுக்கி போட்டு அது முங்கும் அளவு நீர் சேர்த்து மூன்று ஸ்பூன் உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து எடுக்கவும்.

* எண்ணையை சூடாக்கவும்.

* எடுத்ததும் உடனே வடிகட்டி காலிப்ளவரை கார்ன் ப்ளவர் கலவையில் சேர்த்து மூன்று நிமிடம் வைத்து சூடாக்கிய எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* மொறுமொறுப்பான சில்லி கோபி தயார்.

குறிப்பு:
=======


படத்தில் உள்ளது போல் ரெட்டிஷ் கலர் வர வேண்டுமானால் சாதாரண மிளகாய் தூள்ளிற்கு பதிலாக "காஷ்மிரி சில்லி பௌடர்" சேர்த்து செய்யவும்.

இதே போல் வாழைக்காயில் செய்யலாம்.வாளைக்காயினை 1/4 பாகமாக வேக வைத்து மெலிதாக நறுக்கி மேல் சொன்ன முறையில் செய்யலாம்.


நன்றி

Saturday, September 19, 2009

மு‌ட்டை ப‌ப்‌ஸ்

வீ‌ட்டிலேயே செ‌ய்யலா‌ம் மு‌ட்டை ப‌ப்‌ஸ் :




தேவையான பொருட்கள்:

முட்டை 2
பஃ‌ப்‌ஸ் ‌ஷ‌ீ‌ட்‌ஸ் - 4 (ரெடிமேடாகவே ‌கிடை‌க்‌கிறது)
இஞ்சி பூண்டு விழுது, ‌மிளகு தூ‌ள், த‌னியா தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - தலா 1/2 தே‌க்கர‌ண்டி
எ‌ண்ணெ‌ய் - 1 க‌‌ப்
வெங்காயம் - 5
‌த‌க்கா‌ளி - 1
கறிவேப்பிலை, கர‌ம்மசாலா தூ‌ள் - ‌சி‌றிது

செய்முறை:

மு‌ட்டையை வேக வை‌த்து தோ‌ல் உ‌ரி‌த்து இர‌ண்டு பாகமாக வெ‌ட்டி வை‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌‌ம், த‌க்கா‌ளியை பொடியாக நறு‌க்‌கி வைக்கவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சே‌ர்‌த்து வதக்கவு‌ம்.
இஞ்சி பூண்டு ‌விழுதை சே‌ர்‌த்து வதக்கி, ‌பி‌ன் தக்காளி சேர்த்து வதக்கவு‌ம்.

‌பிறகு பொடி வகைகளை சே‌ர்‌த்து ந‌ன்கு ‌‌கிள‌றி 3 நிமிடம் வேக ‌விடவு‌ம். இறு‌தியாக மு‌ட்டைகளை இ‌ட்டு வத‌க்கவு‌ம்.

பின் ‌சி‌றிது மசாலாவுட‌ன் பாதி முட்டையையும் ஒரு ப‌ப்‌ஸ் ஷீ‌ட்டில் வைத்து ஓரங்களை மடிக்க வேண்டும். இப்படி 4 ப‌ப்‌ஸ்களையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

ஓவென் டோஸ்டரில் நா‌ன்கு ப‌ப்‌ஸ்களையு‌ம் வை‌த்து 30 நிமிடம் வேக‌விடவு‌ம். அ‌வ்வளவுதா‌ன் முட்டை பப்ஸ் தயார்.

மீன் கட்லட்

மீன் கட்லட் :




தேவையான பொருள்கள் :
மீன் - 1-4 கிலோ (வஞ்சரம் நன்று, முள்ளை நீக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 1 (வேகவைத்து தோல் உரித்து மசிய வைத்துக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 3-5 (பொடியாக அரிந்து கொள்ளவும்)
வெங்காயம் - 1-2 (பொடியாக அரிந்து கொள்ளவும்)
கொத்தமல்லி - தேவையான அளவு (பொடியாக அரிந்து கொள்ளவும்)
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக் கரு - 2
ரொட்டித் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
1. மீனை 3-4 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, அரிந்த மிளகாய், வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, சீரகத் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வேகவைத்த மீன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
3. இதன் பதம் பூரிக்கு மாவு பினையும் அளவுக்கு இருக்க வேண்டும். பின் சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
4. இப்போது ஒவ்வொரு உருண்டைகளாக முட்டையின் வெள்ளைக் கருவில் நனைத்து பின் ரொட்டித் தூளில் போட்டு உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மீன் வறுவல்

மீன் வறுவல்




தேவையான பொருள்கள்


மீன் (வஞ்சரம்) - 1
சிறிய வெங்காயம் - 10முதல் 15 (அரைத்துக் கொள்ளவும்)
பூண்டு - 5 அல்லது 6 வரை (அரைத்துக் கொள்ளவும்)
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3-4 மேசைக்கரண்டி
மஞ்சள்த்தூள் - சிறிது
உப்பு - சிறிது


செய்முறை


1. எல்லா பொருள்களையும் மீனோடு சேர்த்து 2-3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பின்னர், தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாகிய பின் மீனைப் போட்டு வறுத்து எடுக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
3. சாம்பார் சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்.

செட்டிநாடு மீன் குழம்பு

செட்டிநாடு மீன் குழம்பு :



தேவையான பொருட்கள் :

மீன் : அரை கிலோ

சின்ன வெங்காயம் : 1 கப்,

தக்காளி : 1 ,

பூண்டு : மூன்று பல்,

புளி : எலுமிச்சை அளவு,

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்,

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு


தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்,சோம்பு : கால் ஸ்பூன்,கறிவேப்பிலை : தேவையான அளவு.நல்ல எண்ணெய் : தேவையான அளவு

(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)



செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் மீனை வேக விடவும். மீன் நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.


அவ்வளவுதாங்க! சூப்பர் மீன் குழம்பு ரெடி!

மீன் கட்லட்

மீன் கட்லட் :



தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
சி-வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது - 1/4 ஸ்பூன்
மல்லி இலை -1 கொத்து
புதினா இலை -1 கொத்து
ரஸ்க் – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :


மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக நமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

மீன் பிரியாணி

மீன் பிரியாணி :



எப்போ பார்த்தாலும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று ஒரே மாதிரி தான் நாம் செய்கிறோம் FOR CHANGE மீன் பிரியாணி செய்து பாருங்க அதன் சுவையோ தனி தான் !!!

தேவையான பொருட்கள்


மீன் - 1 KG

பாசுமதி அரிசி - 1 KG

தக்காளி - 1/2 KG

பெ..வெங்கயம் - 1/4 KG

தயிர் - 1/2 CUP

ப-மிளகாய் - 5
நெய் - 1/4 CUP

எண்ணெய் - 1 CUP

எலுமிச்சம்பழம் – 2
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது - 5 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - சிறிது
சோம்பு,கசகசா - 3 ஸ்பூன்
ஜாதிக்காய்,ஜாதிரம்,ஜாதிபத்ரி - 10 gm

முந்திரி,திராட்சை - 20 gm

ஏலக்காய் - 5
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை – தலா 1 கைப்பிடி


செய்முறை:-


மீன் தயாரிக்க


முதலில் மீனை சுத்தம் செய்து துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்து முள் நீக்கி பிசிறி வைக்கவும்.


நெய் சாதம் தயாரிக்க


பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.(குக்கரிலும் வைக்கலாம்)


அரைக்க வேண்டியவை


இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும்.சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும்.ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.மசாலா தயாரிக்க


வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி.
அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி
தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.
முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்


பிரியாணி கலக்க :

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.
அல்லது

சாதம் தனி மசாலா தனி என இரு வேறு பாத்திரத்தில் எடுத்து பரிமாறலாம்.


சுவையான மீன் பிரியாணி தயார்