Saturday, September 19, 2009

மு‌ட்டை ப‌ப்‌ஸ்

வீ‌ட்டிலேயே செ‌ய்யலா‌ம் மு‌ட்டை ப‌ப்‌ஸ் :




தேவையான பொருட்கள்:

முட்டை 2
பஃ‌ப்‌ஸ் ‌ஷ‌ீ‌ட்‌ஸ் - 4 (ரெடிமேடாகவே ‌கிடை‌க்‌கிறது)
இஞ்சி பூண்டு விழுது, ‌மிளகு தூ‌ள், த‌னியா தூ‌ள், ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - தலா 1/2 தே‌க்கர‌ண்டி
எ‌ண்ணெ‌ய் - 1 க‌‌ப்
வெங்காயம் - 5
‌த‌க்கா‌ளி - 1
கறிவேப்பிலை, கர‌ம்மசாலா தூ‌ள் - ‌சி‌றிது

செய்முறை:

மு‌ட்டையை வேக வை‌த்து தோ‌ல் உ‌ரி‌த்து இர‌ண்டு பாகமாக வெ‌ட்டி வை‌க்கவு‌ம்.

வெ‌‌ங்காய‌‌ம், த‌க்கா‌ளியை பொடியாக நறு‌க்‌கி வைக்கவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதில் வெங்காயம், கறிவேப்பிலை சே‌ர்‌த்து வதக்கவு‌ம்.
இஞ்சி பூண்டு ‌விழுதை சே‌ர்‌த்து வதக்கி, ‌பி‌ன் தக்காளி சேர்த்து வதக்கவு‌ம்.

‌பிறகு பொடி வகைகளை சே‌ர்‌த்து ந‌ன்கு ‌‌கிள‌றி 3 நிமிடம் வேக ‌விடவு‌ம். இறு‌தியாக மு‌ட்டைகளை இ‌ட்டு வத‌க்கவு‌ம்.

பின் ‌சி‌றிது மசாலாவுட‌ன் பாதி முட்டையையும் ஒரு ப‌ப்‌ஸ் ஷீ‌ட்டில் வைத்து ஓரங்களை மடிக்க வேண்டும். இப்படி 4 ப‌ப்‌ஸ்களையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

ஓவென் டோஸ்டரில் நா‌ன்கு ப‌ப்‌ஸ்களையு‌ம் வை‌த்து 30 நிமிடம் வேக‌விடவு‌ம். அ‌வ்வளவுதா‌ன் முட்டை பப்ஸ் தயார்.

மீன் கட்லட்

மீன் கட்லட் :




தேவையான பொருள்கள் :
மீன் - 1-4 கிலோ (வஞ்சரம் நன்று, முள்ளை நீக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 1 (வேகவைத்து தோல் உரித்து மசிய வைத்துக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 3-5 (பொடியாக அரிந்து கொள்ளவும்)
வெங்காயம் - 1-2 (பொடியாக அரிந்து கொள்ளவும்)
கொத்தமல்லி - தேவையான அளவு (பொடியாக அரிந்து கொள்ளவும்)
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக் கரு - 2
ரொட்டித் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
1. மீனை 3-4 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, அரிந்த மிளகாய், வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, சீரகத் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வேகவைத்த மீன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
3. இதன் பதம் பூரிக்கு மாவு பினையும் அளவுக்கு இருக்க வேண்டும். பின் சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
4. இப்போது ஒவ்வொரு உருண்டைகளாக முட்டையின் வெள்ளைக் கருவில் நனைத்து பின் ரொட்டித் தூளில் போட்டு உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மீன் வறுவல்

மீன் வறுவல்




தேவையான பொருள்கள்


மீன் (வஞ்சரம்) - 1
சிறிய வெங்காயம் - 10முதல் 15 (அரைத்துக் கொள்ளவும்)
பூண்டு - 5 அல்லது 6 வரை (அரைத்துக் கொள்ளவும்)
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3-4 மேசைக்கரண்டி
மஞ்சள்த்தூள் - சிறிது
உப்பு - சிறிது


செய்முறை


1. எல்லா பொருள்களையும் மீனோடு சேர்த்து 2-3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. பின்னர், தோசைக்கல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாகிய பின் மீனைப் போட்டு வறுத்து எடுக்கவும். எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
3. சாம்பார் சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்.

செட்டிநாடு மீன் குழம்பு

செட்டிநாடு மீன் குழம்பு :



தேவையான பொருட்கள் :

மீன் : அரை கிலோ

சின்ன வெங்காயம் : 1 கப்,

தக்காளி : 1 ,

பூண்டு : மூன்று பல்,

புளி : எலுமிச்சை அளவு,

மல்லித் தூள் : மூன்று ஸ்பூன்,

மிளகாய் தூள் : ஒரு ஸ்பூன்,உப்பு : தேவையான அளவு


தாளிக்க :

வெந்தயம் : கால் ஸ்பூன்,சோம்பு : கால் ஸ்பூன்,கறிவேப்பிலை : தேவையான அளவு.நல்ல எண்ணெய் : தேவையான அளவு

(குறிப்பு : புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு கரைக்கவும், அதில் உப்பு, தக்காளி, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்து கொள்ளவும்)



செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும். வதங்கியவுடன் இந்தப் புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதிக்கும் குழம்பில் மீன் துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போடவும். குறைவான சூட்டில் சிறிது நேரம் மீனை வேக விடவும். மீன் நன்றாக வெந்தவுடன் அடுப்பை நிறுத்தி விடவும்.


அவ்வளவுதாங்க! சூப்பர் மீன் குழம்பு ரெடி!

மீன் கட்லட்

மீன் கட்லட் :



தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ
உருளைக்கிழங்கு - 2
சி-வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 5
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டுவிழுது - 1/4 ஸ்பூன்
மல்லி இலை -1 கொத்து
புதினா இலை -1 கொத்து
ரஸ்க் – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
முட்டை – 4 (தேவைக்கு ஏற்ப்ப)
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :


மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெயை விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலை ஆகியவற்றை வதக்கி மீன் கலவையில் சேர்க்கவும்.

அத்துடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

மு‌ட்டையை (வெள்ளைக்கரு மட்டும்) ஒரு வா‌ய் அக‌‌ன்ற பா‌த்‌திர‌த்‌தி‌ல் உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு வாணலியில் எண்ணெயை விட்டு நன்கு காய்ந்த்தும் மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக நமக்கு பிடித்த வடிவில் தட்டி முட்டையில் தோய்த்து ரஸ்க் தூளில் புரட்டி பொரித்தெடுக்கவும்.

மீன் பிரியாணி

மீன் பிரியாணி :



எப்போ பார்த்தாலும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று ஒரே மாதிரி தான் நாம் செய்கிறோம் FOR CHANGE மீன் பிரியாணி செய்து பாருங்க அதன் சுவையோ தனி தான் !!!

தேவையான பொருட்கள்


மீன் - 1 KG

பாசுமதி அரிசி - 1 KG

தக்காளி - 1/2 KG

பெ..வெங்கயம் - 1/4 KG

தயிர் - 1/2 CUP

ப-மிளகாய் - 5
நெய் - 1/4 CUP

எண்ணெய் - 1 CUP

எலுமிச்சம்பழம் – 2
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு,பட்டை,விழுது - 5 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - சிறிது
சோம்பு,கசகசா - 3 ஸ்பூன்
ஜாதிக்காய்,ஜாதிரம்,ஜாதிபத்ரி - 10 gm

முந்திரி,திராட்சை - 20 gm

ஏலக்காய் - 5
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை,புதினா,மல்லிதழை – தலா 1 கைப்பிடி


செய்முறை:-


மீன் தயாரிக்க


முதலில் மீனை சுத்தம் செய்து துண்டு போடவும், பின் அதில் மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாக பொரித்து எடுத்து முள் நீக்கி பிசிறி வைக்கவும்.


நெய் சாதம் தயாரிக்க


பாசுமதி அரிசியை கழுவி சிறிது நேரம் கழித்து உப்பு.பட்டை,கிராம்பு,ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தை தனியே வைக்கவும்.(குக்கரிலும் வைக்கலாம்)


அரைக்க வேண்டியவை


இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைக்கவும்.சோம்பு, கசகசா இரண்டையும் அரைக்கவும்.ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்து பொடி செய்து கொள்ளவும்.நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து தனியே வைக்கவும்.மசாலா தயாரிக்க


வணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி.
அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி,பூண்டு,பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி
தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி, போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.
முந்திரி,திராட்சையை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும்


பிரியாணி கலக்க :

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கிய பின்பு மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.அடுத்து சாத்தை எடுத்து கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.பின்பு குக்கரை மூடி 10 நிமிடம் சிம்மில் வைக்கவும், ஒரு விசில் வரும் முன்னே அடுப்பை அனைத்து விடவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறலாம்.
அல்லது

சாதம் தனி மசாலா தனி என இரு வேறு பாத்திரத்தில் எடுத்து பரிமாறலாம்.


சுவையான மீன் பிரியாணி தயார்

நெத்திலி மீன் குழம்பு

நெத்திலி மீன் குழம்பு :




தேவையானவை :

நெத்திலி மீன் – அரைக் கிலோ
புளி – இரண்டு எலுமிச்சை அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
வெங்காயம் – மூன்று
இஞ்சி, பூண்டு – தேவையான அளவு
தக்காளி – மூன்று
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூ‌ன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூ‌ன்
பச்சை மிளகாய் – ஆறு
கொத்துமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – இரண்டு கீற்று

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கழுவி கொள்ள வேண்டும்.

புளியை நன்கு கரைத்து வடித்து கொள்ளவும்.

இ‌‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌க்கு‌ம் போது அதனுட‌ன் ஒரு வெ‌ங்காய‌த்தையு‌ம் போ‌ட்டு அரை‌த்து ‌விழுதாக எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெ‌ங்காய‌ விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தக்காளி போட்டு வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் கா‌ய்‌ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு புளி தண்ணீர் ஊற்றவு‌ம்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு மீனை போட்டு இறக்கவும். குழ‌ம்‌பி‌ல் ‌மீனை போ‌ட்ட ‌பிறகு கர‌ண்டியை வை‌த்து ‌வேகமாக‌க் கிள‌‌ற‌க் கூடாது. சுவையான நெத்திலி மீன் குழம்பு தயா‌ர்.

நெத்திலி மீன் குழம்பு எப்படி ? ருசியா இருக்கும் நீங்களும் செய்துபார்த்துட்டு சொல்லுங்க சரியா ?

த‌க்கா‌ளி மீன் குழம்பு

த‌க்கா‌ளி மீன் குழம்பு




வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல் பு‌ளியை‌க் குறை‌த்து ஆனா‌ல் சுவையை அ‌‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்களு‌க்கு ஒரே வ‌ழி, மீன் குழம்‌பி‌ல் அ‌திகமாக தக்காளி போட்டு செய்து பாருங்கள்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வ‌ே‌ண்டியவை

மீன் - 300 ‌கிரா‌ம்
தக்காளி - 6
சாம்பார் வெங்காயம் - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு ‌சி‌றிதளவு
வெந்தயம் - ‌சி‌றிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

‌வா‌ங்‌கி வ‌ந்த ‌மீனை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து கழு‌வி ‌சி‌றிது பு‌ளி‌த் த‌ண்‌ணீ‌ர் ‌‌வி‌ட்டு எடு‌த்து வ‌ை‌த்து ‌விடு‌ங்க‌ள்.

புளியைக் கரைத்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தயா‌ர் செ‌ய்து வை‌‌‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌‌ள்.

தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளுங்கள். சாம்பார் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளுங்கள்.

அடுப்பில் அக‌ண்ட பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள்.

இதில் அரிந்த வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள். அ‌தி‌ல் பு‌ளி‌க் கரைசலை‌க் கொ‌ட்டி ந‌ன்கு கொதிக்க விடுங்கள்.

குழம்பு ந‌ன்கு கொதித்து சு‌ண்டி வரு‌ம் போது கழுவி வை‌த்‌திரு‌க்கு‌ம் மீனைப் போட்டு இறக்குங்கள்.

சுவையான தக்காளி மீன் குழம்பு தயார்.

மு‌ட்டை ‌மிளகு தோசை

மு‌ட்டை ‌மிளகு தோசை




மு‌ட்டை தோசை‌யி‌ல் இது ஒரு வகை.

தேவையானவை :

தோசை மாவு - 2 க‌ப்
மு‌ட்டை - 2
‌மிளகு தூ‌ள் - 1 ‌தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ண‌ெ‌‌ய் - தோசை சுடுவத‌ற்கு


செ‌ய்யு‌ம் முறை :


முத‌லி‌ல் தோசை மாவை உ‌ப்பு போ‌ட்டு ந‌ன்கு அடி‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் ஒரு ‌சி‌ட்டிகை உ‌ப்பு, இர‌‌ண்டு ‌சி‌ட்டிகை ‌மிளகு தூ‌ள் போ‌ட்டு ‌சில து‌‌ளிக‌ள் த‌ண்‌‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கல‌ந்து, அ‌தி‌ல் ஒரு மு‌ட்டை உடை‌த்து ஊ‌ற்‌றி ந‌ன்கு அடி‌த்து‌ வை‌க்கவு‌ம்.

தோசை‌க் க‌ல் ந‌ன்கு கா‌ய்‌ந்‌தது‌ம் தோசைமாவை ஊ‌ற்‌றி தோசை அள‌வி‌ற்கு தே‌ய்‌‌த்து‌விடவு‌ம்.

அத‌ன் ‌மீது அடி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மு‌ட்டையை ஊ‌ற்‌றி ந‌ன்கு பர‌ப்‌பி ‌விடவு‌ம். தோசையை‌ச் சு‌ற்‌றி எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றவு‌ம்.

‌தோசை ந‌ன்கு வெ‌ந்தது‌ம் ‌திரு‌ப்‌பி போ‌ட்டு ஒரு ‌சில நொடிக‌ளி‌ல் எடு‌த்து‌ப் ப‌ரிமாறவு‌ம்.

சுவையான ‌மு‌ட்டை ‌‌மிளகு தோசை‌த் தயா‌ர்.

கு‌றி‌ப்பு - தோசை வா‌ர்‌க்கு‌ம் போது ‌சி‌றிது தடினமாக வா‌ர்‌த்தா‌ல் ந‌ன்றாக இரு‌க்கு‌ம். ஒரு தோசை‌க்கு ஒரு மு‌ட்டை ‌வி‌கித‌ம் ச‌ரியாக இரு‌க்கு‌ம்.

மு‌ட்டை‌‌க் குழ‌ம்பு

மு‌ட்டை‌‌க் குழ‌ம்பு




தேவையான பொருட்கள்

முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - ஒரு ‌சி‌ட்டிகை
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்துமல்லி- அல‌சி நறு‌க்‌கியது
எண்ணெய், கடுகு - தா‌‌ளி‌க்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை


மு‌த‌‌லி‌ல் மு‌ட்டைகளை வேக வை‌த்து எடு‌த்து‌ தோ‌ல் உ‌ரி‌த்து இரண‌்டு பாகமாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.


வெங்காயம், பூ‌ண்டை தோ‌ல் ‌‌நீ‌க்‌கி, தக்காளியை சே‌ர்‌த்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி கடுகு, க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தா‌ளி‌த்து, அ‌தி‌ல் வெ‌ங்காய‌ம், பூ‌‌ண்டு, த‌க்கா‌ளி என ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக போ‌ட்டு வதக்கவும்.

இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிள‌றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குழ‌ம்பு ந‌ன்கு சு‌ண்டி வ‌ரு‌‌ம்போது, வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்

செட்டிநாடு கோழி குழம்பு

செட்டிநாடு கோழி குழம்பு


தேவையான பொருள்கள்:-

கோழி – 1 கிலோ
கிராம்பு – 2
பட்டை – 2
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
சோம்புத்தூள்- 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன்
மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன்
முந்திரிபருப்பு – நூறு கிராம்
தேங்காய் – 1 மூட
உப்பு – தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன
காய்ந்த மிளகாய் – 4
தக்காளி – 250 கிராம்
பெரியவெங்காயம் – 250 கிராம்
எண்ணெய் – 250கிராம்

செய்முறை;-

முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும். அத்துடன்
வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய) கோழியை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பைகுறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.

Wednesday, September 16, 2009

வெஜிடபிள் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி



தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கிலோ
கொத்தமல்லி - 1 கட்டு
உருளைக் கிழங்கு - 100 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
வெங்காயம் - 250 கிராம்
டால்டா - 100 கிராம்
இலவங்கம் - 1துண்டு
தேங்காய் - 1
பச்சை மிளகாய் - 12
காலி பிளவர் - 200 கிராம்
பூண்டு - 100 கிராம்
ஏலக்காய் - 10
கிராம்பு - 10
பட்டாணி - 100 கிராம்
நல்லெண்ணைய் - 100 கிராம்
உப்பு மற்றும் புதினா - தேவையான அளவு
கேசரிப் பவுடர் - கால் தேக்கரண்டி

செய்முறை:


அரிசியை ஊறவைக்கவும். காய்களை ஒரே அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைத்து, எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.

முட்டை பிரியாணி

முட்டை பிரியாணி :


தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 2 ஆழா‌‌க்கு
முட்டை - 3
வெங்காயம் -இரண்டு
தக்காளி -மூன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள், கரம்மசாலாதூள் -ஒரு தே‌க்கர‌ண்டி
மஞ்சள்தூள் - அரை தே‌க்கர‌ண்டி
தயிர், தே‌ங்கா‌ய்‌ப்பா‌ல் - தலா ஒரு க‌ப்
எண்ணெய் - 1 க‌ப்
பட்டை, ‌கிரா‌ம்பு, கிராம்பு , ஏலக்காய் -தலா இரண்டு

செய்முறை :

அரிசியை ‌சி‌றிது ‌உ‌ப்பு சே‌ர்‌த்து அரை வே‌க்காடாக வேகவைத்து ஆற ‌விடவு‌ம்.

முட்டையை வேகவைத்து தோ‌ல் உரித்து ஆ‌ங்கா‌ங்கு ‌கீ‌றவு‌ம்.

வெங்காயம், தக்காளியை ‌நீள வா‌க்‌கி‌ல் நறு‌க்கவு‌ம். மிளகாயை இரண்டாக கீறவும்.

பா‌த்‌திர‌த்‌‌தி‌ல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, ‌மிளகா‌ய், இஞ்சி - பூண்டு ‌விழுது சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.

‌பி‌ன் அனை‌த்து தூளையு‌ம், முட்டையையு‌ம் போட்டு ‌வதக்கவும்.

‌பி‌ன்ன‌ர் தேங்காய்பால், தயிர் ஊற்றி, சி‌றிது உ‌ப்பு போ‌ட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேக வி‌ட்டு பின் சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போ‌ட்டு மல்லி‌த்தழையை‌த் தூவி இற‌க்கவும்

Tuesday, September 8, 2009

சிக்கன் டிக்கா

சிக்கன் டிக்கா

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - கால் கிலோ.
தயிர் - கால் கப்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
ஏலக்காய் - 3
மிளகுத்தூள், சீரகத்தூள், ஜாதிபத்ரி - சிறிதளவு
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு
கடலைமாவு, எலுமிச்சை சாறு - சிறிதளவு
வெண்ணெய் - சிறிது

செய்முறை:

கோழிக்கறியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், ஜாதிபத்ரியை ஒன்றாய் சேர்த்து பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும்.

தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையினை கோழித்துண்டுகள் மீது பூசி 4 மணி நேரம் நன்கு ஊற விடவும்.

இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து 350 டிகிரி சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும் (தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது). 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.

பின்னர் எடுத்து பரிமாறவும். தேவையானால் அதன் மீது கொத்தமல்லி, தக்காளி சாஸ், வெள்ளரிக்காய், கேரட் தூவிக் கொள்ளலாம்.

Monday, September 7, 2009

பெங்களூர் சிக்கன்

பெங்களூர் சிக்கன்

தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
முட்டை - 3
மைதா - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - ஒரு கரண்டி
இஞ்சிவிழுது - அரை கரண்டி
பூண்டுவிழுது - அரை கரண்டி
தயிர் - 2 கரண்டி
எலுமிச்சம் பழம் - அரை மூடி
பட்டை - சிறிது
கிராம்பு - 5 கிராம்
எண்ணெய் - பொரிக்க
சிகப்பு பவுடர் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

சிக்கனைத் துண்டுகளாக வெட்டி, கழுவி சுத்தம் செய்து, அதில் மைதா சேர்க்கவும்.
அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிப் போடவும்.
இஞ்சி, பூண்டு விழுதையும் அத்துடன் சேர்க்கவும். பிறகு பட்டை, கிராம்பு பொடி செய்து போடவும்.
சிவப்பு பவுடர் சேர்க்கவும். எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் தயிர் சேர்க்கவும். இக்கலவையை நன்றாகப் பிசையவும்.
தண்ணீர் கொஞ்சம் கூடச் சேர்க்கக் கூடாது. இக்கலவையை சுமார் 15 - 25 நிமிடங்கள் ஊறவிடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கறித்துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.





பரிமாறும் அளவு சமைக்கும் நேரம்
3 நபர்களுக்கு 30 நிமிடங்கள்

கோவா சிக்கன் கறி

கோவா சிக்கன் கறி



தேவையான பொருட்கள :

கோழி - ஒன்று
தேங்காய் - ஒன்று
மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு
உலர்ந்த மிளகாய் - 10
மிளகு - 6
பட்டை - இரண்டு அங்குலத்துண்டு
ஏலக்காய் - 4
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
கிராம்பு - 4
புளி - சிறு எலுமிச்சை அளவு
வினிகர் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
சீனி - ஒரு தேக்கரண்டி

செய்முற :

கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். கறியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.
புளியை அரை கோப்பை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
மஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.
கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல், வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும்.
நன்கு வெந்து குழம்பாய் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

கோழி மசாலா

கோழி மசாலா

தேவையான பொருட்கள் :

கோழி - ஒன்று
தயிர் - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
எலுமிச்சைபழம் - ஒன்று
ஏலக்காய் - 5
பட்டை - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - 7
பூண்டு - 12 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகு - 10
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 5
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கறியைப் பெரிய துண்டுகளாக வெட்டி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
இஞ்சி, பூண்டினை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கிராம்பு, பட்டை, ஏலக்காய், மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, அரைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்து சிவந்தவுடன் கறியை சேர்த்து வேக வைக்கவும்.
கறி நன்கு வெந்தபின் எலுமிச்சம்பழம் பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளிந்து வந்ததும் இறக்கவும்

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன்


தேவையான பொருட்கள் :

கோழி - இரண்டு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
தயிர் - 6 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 100 கிராம்
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
சிகப்பு பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை
கோழியினை சுத்தம் செய்து, மார்பு, தொடை, கால் பகுதி என மூன்றையும் தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். அல்லது அப்படியே முழுக் கோழியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு வெட்டி எடுத்த ஒவ்வொரு துண்டங்களின் சதைப் பகுதியிலும் கத்தியால் மூன்று ஆழமான வெட்டுக்களை உருவாக்கவும்.
மிளகாய்த்தூளுடன் உப்பினையும் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து மையாக கரைத்து கோழித்துண்டங்கள் மீது ஒரே அளவில் பூசி சுமார் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
இப்போது தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், இஞ்சி, பூண்டு விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் குங்குமப்பூ, வண்ணப்பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டங்கள் மீது பூசவும்.
மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டங்களை சுமார் 4 மணி நேரங்களுக்கு நன்கு ஊறவிடவும்.
அதன் பிறகு அதனை எடுத்து கம்பியில் சொருகி, சூடேற்றப்பட்ட ஓவனில் 350 டிகிரி F ல் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
தந்தூரி அடுப்பு இருக்கும் பட்சத்தில் சுமார் 8 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.
அடுப்பில் வைத்த 5 நிமிடங்களுக்கு பிறகு ஒருமுறை கறியினை எடுத்து அதிகப்படியான நீரை வடித்து விட்டு, அதன் மீது வெண்ணெய் தடவி மேலும் சில நிமிடங்களுக்கு(4-5) வேகவிட்டு எடுக்கவும்.



பரிமாறும் அளவு சமைக்கும் நேரம்
6 நபர்களுக்கு 25 நிமிடங்கள்