Saturday, September 19, 2009

த‌க்கா‌ளி மீன் குழம்பு

த‌க்கா‌ளி மீன் குழம்பு




வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல் பு‌ளியை‌க் குறை‌த்து ஆனா‌ல் சுவையை அ‌‌திக‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌ப்பவ‌ர்களு‌க்கு ஒரே வ‌ழி, மீன் குழம்‌பி‌ல் அ‌திகமாக தக்காளி போட்டு செய்து பாருங்கள்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வ‌ே‌ண்டியவை

மீன் - 300 ‌கிரா‌ம்
தக்காளி - 6
சாம்பார் வெங்காயம் - 2
புளி - எலுமிச்சையளவு
மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு ‌சி‌றிதளவு
வெந்தயம் - ‌சி‌றிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செ‌ய்யு‌ம் முறை

‌வா‌ங்‌கி வ‌ந்த ‌மீனை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து கழு‌வி ‌சி‌றிது பு‌ளி‌த் த‌ண்‌ணீ‌ர் ‌‌வி‌ட்டு எடு‌த்து வ‌ை‌த்து ‌விடு‌ங்க‌ள்.

புளியைக் கரைத்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தயா‌ர் செ‌ய்து வை‌‌‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌‌ள்.

தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளுங்கள். சாம்பார் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வை‌த்து‌க் கொ‌ள்ளுங்கள்.

அடுப்பில் அக‌ண்ட பாத்திரத்தை வைத்து காய்ந்ததும் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் போட்டுத் தாளியுங்கள்.

இதில் அரிந்த வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்குங்கள். அ‌தி‌ல் பு‌ளி‌க் கரைசலை‌க் கொ‌ட்டி ந‌ன்கு கொதிக்க விடுங்கள்.

குழம்பு ந‌ன்கு கொதித்து சு‌ண்டி வரு‌ம் போது கழுவி வை‌த்‌திரு‌க்கு‌ம் மீனைப் போட்டு இறக்குங்கள்.

சுவையான தக்காளி மீன் குழம்பு தயார்.

No comments:

Post a Comment