Saturday, September 19, 2009

மு‌ட்டை‌‌க் குழ‌ம்பு

மு‌ட்டை‌‌க் குழ‌ம்பு




தேவையான பொருட்கள்

முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மஞ்சள் தூள் - ஒரு ‌சி‌ட்டிகை
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்துமல்லி- அல‌சி நறு‌க்‌கியது
எண்ணெய், கடுகு - தா‌‌ளி‌க்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை


மு‌த‌‌லி‌ல் மு‌ட்டைகளை வேக வை‌த்து எடு‌த்து‌ தோ‌ல் உ‌ரி‌த்து இரண‌்டு பாகமாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.


வெங்காயம், பூ‌ண்டை தோ‌ல் ‌‌நீ‌க்‌கி, தக்காளியை சே‌ர்‌த்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி கடுகு, க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு தா‌ளி‌த்து, அ‌தி‌ல் வெ‌ங்காய‌ம், பூ‌‌ண்டு, த‌க்கா‌ளி என ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக போ‌ட்டு வதக்கவும்.

இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌கிள‌றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

குழ‌ம்பு ந‌ன்கு சு‌ண்டி வ‌ரு‌‌ம்போது, வெட்டி வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்

No comments:

Post a Comment