Monday, September 7, 2009

தந்தூரி சிக்கன்

தந்தூரி சிக்கன்


தேவையான பொருட்கள் :

கோழி - இரண்டு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 மேசைக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
தயிர் - 6 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 100 கிராம்
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு தேக்கரண்டி
சிகப்பு பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை
கோழியினை சுத்தம் செய்து, மார்பு, தொடை, கால் பகுதி என மூன்றையும் தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். அல்லது அப்படியே முழுக் கோழியாகவும் வைத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு வெட்டி எடுத்த ஒவ்வொரு துண்டங்களின் சதைப் பகுதியிலும் கத்தியால் மூன்று ஆழமான வெட்டுக்களை உருவாக்கவும்.
மிளகாய்த்தூளுடன் உப்பினையும் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து மையாக கரைத்து கோழித்துண்டங்கள் மீது ஒரே அளவில் பூசி சுமார் 20 நிமிடங்கள் ஊற விடவும்.
இப்போது தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், இஞ்சி, பூண்டு விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் குங்குமப்பூ, வண்ணப்பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டங்கள் மீது பூசவும்.
மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டங்களை சுமார் 4 மணி நேரங்களுக்கு நன்கு ஊறவிடவும்.
அதன் பிறகு அதனை எடுத்து கம்பியில் சொருகி, சூடேற்றப்பட்ட ஓவனில் 350 டிகிரி F ல் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
தந்தூரி அடுப்பு இருக்கும் பட்சத்தில் சுமார் 8 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.
அடுப்பில் வைத்த 5 நிமிடங்களுக்கு பிறகு ஒருமுறை கறியினை எடுத்து அதிகப்படியான நீரை வடித்து விட்டு, அதன் மீது வெண்ணெய் தடவி மேலும் சில நிமிடங்களுக்கு(4-5) வேகவிட்டு எடுக்கவும்.



பரிமாறும் அளவு சமைக்கும் நேரம்
6 நபர்களுக்கு 25 நிமிடங்கள்

No comments:

Post a Comment