Wednesday, September 16, 2009

முட்டை பிரியாணி

முட்டை பிரியாணி :


தேவையான பொருட்கள்

பிரியாணி அரிசி - 2 ஆழா‌‌க்கு
முட்டை - 3
வெங்காயம் -இரண்டு
தக்காளி -மூன்று
இஞ்சி பூண்டு விழுது - 2 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - தேவையான அளவு
மிளகாய்தூள், கரம்மசாலாதூள் -ஒரு தே‌க்கர‌ண்டி
மஞ்சள்தூள் - அரை தே‌க்கர‌ண்டி
தயிர், தே‌ங்கா‌ய்‌ப்பா‌ல் - தலா ஒரு க‌ப்
எண்ணெய் - 1 க‌ப்
பட்டை, ‌கிரா‌ம்பு, கிராம்பு , ஏலக்காய் -தலா இரண்டு

செய்முறை :

அரிசியை ‌சி‌றிது ‌உ‌ப்பு சே‌ர்‌த்து அரை வே‌க்காடாக வேகவைத்து ஆற ‌விடவு‌ம்.

முட்டையை வேகவைத்து தோ‌ல் உரித்து ஆ‌ங்கா‌ங்கு ‌கீ‌றவு‌ம்.

வெங்காயம், தக்காளியை ‌நீள வா‌க்‌கி‌ல் நறு‌க்கவு‌ம். மிளகாயை இரண்டாக கீறவும்.

பா‌த்‌திர‌த்‌‌தி‌ல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, ‌மிளகா‌ய், இஞ்சி - பூண்டு ‌விழுது சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.

‌பி‌ன் அனை‌த்து தூளையு‌ம், முட்டையையு‌ம் போட்டு ‌வதக்கவும்.

‌பி‌ன்ன‌ர் தேங்காய்பால், தயிர் ஊற்றி, சி‌றிது உ‌ப்பு போ‌ட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேக வி‌ட்டு பின் சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போ‌ட்டு மல்லி‌த்தழையை‌த் தூவி இற‌க்கவும்

1 comment:

  1. இதே செய்முறை பல இணைய தளங்களில் இருக்கிறது. எல்லோருமே வெட்டி ஒட்டியிருக்கிறீர்கள். மிளகாயை இரண்டாக நறுக்க சொல்லிவிட்டு எத்தனை மிளகாய்கள் என்று சொல்லவில்லை. செய்து பார்த்தவர்கள் யாரும் இல்லை.

    ReplyDelete